Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

திமுகவுக்கு நன்றி.. மதுரையில் போஸ்டர் ஒட்டி பாராட்டிய பாஜக.. நடந்தது என்ன?

Sekar Updated:
திமுகவுக்கு நன்றி.. மதுரையில் போஸ்டர் ஒட்டி பாராட்டிய பாஜக.. நடந்தது என்ன?Representative Image.

இந்திய அஞ்சல் துறை மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் திமுகவிற்கு நன்றி தெரிவித்து, பாஜக சார்பில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. ஆனால் அதற்கு திமுகவினர் கூறும் விளக்கம் இன்னும் ஹைலைட்டாகியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் முதல் சினிமா, திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகள் என எது நடந்தாலும் போஸ்டர் அடித்து ஓட்டுவது தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு என்றுமே தனி மவுசு தான்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியானபோது கூட, பாண்டிய நாடு குறித்து போஸ்டர் ஒட்டி மதுரை மக்கள் அதகளபடுத்தினர். அந்தவகையில், தற்போது மதுரை பாஜக திமுகவுக்கு நன்றி தெரிவித்து ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருக்கும் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து உட்கட்சி குழப்பத்தில் திண்டாடி வரும் நிலையில், இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் பாஜக, அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதகளப்படுத்தி வருகின்றனர்.

இரு கட்சிகளும் இப்படி நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு தொடங்கி வைக்கும் சிறப்பு முகாமை நடத்துகிறது.

இந்த செல்வ மகள் திட்டம் என்பது மத்தியில் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இந்திய அஞ்சல் துறையில் கீழ் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இதற்காக மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர்களும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை விமர்சிப்பதும், பின்னர் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு உரிமை கொண்டாடி ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் பாஜக குறை கூறி வருகிறது. இந்நிலையில், இந்த போஸ்டரை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திமுகவுக்கு நன்றி என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது மதுரையில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்து திமுவினர் கூறுகையில், மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களைத்தான் தாங்கள் எதிர்க்கிறோமே தவிர, மக்கள் நலத்திட்டங்களை, அது மத்திய அரசு கொண்டுவந்தாலும் கூட, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து அவர்களுக்கு பயன் கிடைக்க செய்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என ஒரே போடாக போட்டுவிட்டனர். திமுகவினர் சொல்வதும் சரிதானே?

Also Read: ஆன்லைன் ரம்மி சர்ச்சை; அமைச்சர் ரகுபதி முற்றுப்புள்ளி!  

Tag: Madurai News | Madurai District News | Madurai Today News | Madurai City News | Madurai City Today News | .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்