Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கல் பரிசுத் தொகை; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதங்கம்! 

KANIMOZHI Updated:
பொங்கல் பரிசுத் தொகை; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதங்கம்! Representative Image.

பொங்கல் பரிசு தொகை  அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு திமுக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் வழங்காதது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதனிடையே 2023ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் பரிசுப் பணம் வழங்குமா? என்பது கேள்விக்குறியாக நீடித்து வந்தது. 

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். தமிழக முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2-ம் தேதி சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள்" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இத ஆண்டு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு பொது மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் அளிக்க உள்ள பொங்கல் பரிசு தொகை ஏமாற்றம் அளிக்கிறது என்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அரிசி மற்றும் சீனி மட்டும் வழங்கப்படுவதாக அறிவித்திருப்பதாகவும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டுகளில் வழங்கியதைப் போல பொங்கல் பரிசு தொகையுடன் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் கரும்பு, இலவச வேட்டி சேலை போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், பொங்கல் பரிசு தொகையுடன் கிறிஸ்மஸ் முந்திரி பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்