Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது..!

madhankumar July 03, 2022 & 13:57 [IST]
மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது..!Representative Image.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு அமர்வில், இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை, ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே, கோவாவில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்றிரவு மும்பை வந்தடைந்தார்.

கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சொகுசு பேருந்து மூலம் கொலாபா பகுதியில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதிக்கு அழைத்துவரப்பட்டனர். இன்றைய சிறப்பு சட்டப்பேரவை அமர்வில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ள நிலையில், தங்கள் கூட்டணிக்கு 170க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் இன்று நடைபெற இருக்கு சபாநாயகர் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே-பாஜக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் போட்டியிடுகிறார். மற்றும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் உத்தவ் தாக்ரேவின் விசுவாசியான ரஞ்சன் சால்வி போட்டியிடுகிறார். இன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ள நபர் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார்.

இந்த வாக்கெடுப்பில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பலம் 288ஆக உள்ள நிலையில், பாஜகவிடம் 106 எம்எல்ஏக்களும், ஏக்நாத் ஷிண்டேவிடம் சுமார் 50 எம்எல்ஏக்களும் உள்ளனர்.தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியிடம் 44 எம்எல்ஏக்களும் உள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்