Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

மகிஷாசுரனுக்கு பதிலாக காந்தி சிலை.. மேற்குவங்கத்தில் இந்து மகாசபை அக்கப்போர்!!

Sekar October 03, 2022 & 14:28 [IST]
மகிஷாசுரனுக்கு பதிலாக காந்தி சிலை.. மேற்குவங்கத்தில் இந்து மகாசபை அக்கப்போர்!!Representative Image.

கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகிஷாசுரனை மகாத்மா காந்தியாக சித்தரித்து சிலை வைத்தது சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும், உள்துறை அமைச்சகத்தின் அழுத்தத்திற்குப் பிறகு, பூஜை ஏற்பாட்டாளர்கள் காந்தி போல் இருந்த முகத்தை அகற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

காந்தி முகம் போல் வைக்கப்பட்ட மகிஷாசுரன் சிலை குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் அகில பாரத இந்து மகாசபை சிலையின் தோற்றத்தை மாற்றியமைத்துள்ளது.

அகில இந்திய இந்து மகாசபாவின் மேற்கு வங்க மாநிலப் பிரிவின் செயல் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி இது குறித்து கூறுகையில், "நாங்கள் காந்தியை உண்மையான அசுரனாகப் பார்க்கிறோம். அவர்தான் உண்மையான அசுரர். அதனால்தான் மூர்த்தியை இப்படிச் செய்தோம்" என்று கூறினார்.

"மகாத்மா காந்தியை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. நாங்கள் மூர்த்தியை அகற்றி மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உள்துறை அமைச்சகம் எங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. காந்தியை எல்லா இடங்களிலும் இருந்து அகற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்." என்று கோஸ்வாமி மேலும் கூறினார்.

இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபையின் இந்த செயலுக்கு, மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நடவடிக்கைக்கு வங்காள மாகாண இந்து மகாசபை கண்டனம் தெரிவித்துள்ளது. வங்காள மாகாண இந்து மகாசபா தலைவர், "அவர்கள் செய்ததை நாங்கள் கண்டிக்கிறோம். தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். அவர்கள் தங்களை இந்து மகாசபை என்று கூறுகின்றனர். ஆனால் இதை நாங்கள் வருத்தமாக நினைக்கிறோம்." என்றார்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இது தேசத்தந்தைக்கு அவமானம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும். இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்லும்? காந்திஜியைக் கொன்றவர் எந்தக் கருத்தியல் முகாமைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்று கோஷ் மேலும் கூறினார்.

இதற்கிடையே மாநில பாஜகவும் இதை கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக மணிலா தலைவர் சுகந்தா மஜும்தார், “அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அது துரதிர்ஷ்டவசமானது. அதை கண்டிக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக அகில பாரதீய இந்து மகாசபாவின் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி, தாங்கள் தான் ஒரே இந்து மகாசபா கட்சி என்று கூறியதோடு, மற்ற அனைத்து இந்து மகாசபா அமைப்புகளும் பொய்யானவை, அவை அனைத்தும் பாஜகவால் கொண்டுவரப்பட்டவை என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்