Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ஆர்சி அமல்.. மசோதா தாக்கல்.. மாநில சட்டசபையில் நிறைவேற்றம்!!

Sekar August 06, 2022 & 13:00 [IST]
என்ஆர்சி அமல்.. மசோதா தாக்கல்.. மாநில சட்டசபையில் நிறைவேற்றம்!!Representative Image.

மாநில மக்கள் தொகை ஆணையத்தை அமைக்கவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) செயல்படுத்தவும் மணிப்பூர் சட்டமன்றம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு தனிநபர் மசோதாக்களை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. 

மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் கே.கே.ஜோய்கிஷன் தீர்மானங்களை முன்வைத்தார். 1971 மற்றும் 2001 க்கு இடையில் மாநிலத்தின் மலைப் பகுதிகள் 153.3 சதவீத மக்கள்தொகை வளர்ச்சியைக் கண்டதாகவும், 2001-2011 காலகட்டத்தில் அது 250.9 சதவீதமாக உயர்ந்ததாகவும் அவர் கூறினார்.

பள்ளத்தாக்கு பகுதிகள் 1971 முதல் 2001 வரை 94.8 சதவீதமும், 2001 முதல் 2011 வரை சுமார் 125 சதவீதமும் மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்று ஜாய்கிஷன் கூறினார். மணிப்பூரில் வெளியாட்கள் ஊடுருவியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். 

மலைப்பகுதிகளில் குடியேறுவதற்கு பள்ளத்தாக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், குறிப்பாக மலைப்பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு வெளியில் இருந்து வரும் மக்கள் வருவதே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மணிப்பூர் மியான்மருடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், அவரின் இந்த பேச்சு மியான்மரில் இருந்து ஊடுருவிய மக்களை குறிப்பதாகக் இருக்கிறது என நம்பப்படுகிறது. 

இந்நிலையில் அவர் தாக்கல் செய்த தீர்மானங்கள் மீதான விவாதத்தில் முதல்வர் என் பிரேன் சிங்கும் பங்கேற்று, மக்கள் தொகை ஆணையத்தை நிறுவவும், மாநிலத்தில் என்.ஆர்.சி.யை அமல்படுத்தவும் இதுபோன்ற தீர்மானங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களின் கூட்டு நலன்களுக்கும் உதவும் என்றார். 

இதற்கிடையில், பல குடிமை அமைப்புகள் வடகிழக்கு மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண நிலையான கட்-ஆஃப் அடிப்படை ஆண்டுடன் புதுப்பிக்கப்பட்ட என்ஆர்சியை உருவாக்க வேண்டும் என கோரி வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்