Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிஸ் பண்ணிடாதீங்க...1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..!

madhankumar June 12, 2022 & 09:52 [IST]
மிஸ் பண்ணிடாதீங்க...1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..!Representative Image.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில்  சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும், கூட்டம் கூடாமல் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது எனவும்,  இதில் பிஏ4 வகை 7 பேருக்கும், பிஏ5 வகை 11 பேருக்கும் பரவியுள்ளதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் பரவும் ஆபத்து அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூன் 12)ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மேலும் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் முன்களப்பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். இன்று காலை 9 மணி முதல் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்