Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி.. பரிசீலனையே கிடையாது.. மத்திய அரசு அதிரடி!!

Sekar June 22, 2022 & 18:17 [IST]
மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி.. பரிசீலனையே கிடையாது.. மத்திய அரசு அதிரடி!!Representative Image.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலையின் இருந்து நீக்கியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே அணை கட்டப்படுவதாகவும், இதனால் தமிழகத்தின் நீர் பங்கீட்டில் எந்த பாதிப்பும் இருக்காது என கர்நாடக அரசு கூறினாலும், கடந்த கால வரலாற்றை பார்த்து தமிழகம் அதை ஏற்க மறுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, கர்நாடகாவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ள அம்மாநில அரசு அணை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒரு விண்ணப்பத்தையும் சமர்ப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீக்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்