Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

3 நாள்.. இரண்டு நாடுகள்.. பிரதமர் மோடியின் அடுத்த ஃபாரின் ட்ரிப்!!

Sekar June 22, 2022 & 17:03 [IST]
3 நாள்.. இரண்டு நாடுகள்.. பிரதமர் மோடியின் அடுத்த ஃபாரின் ட்ரிப்!!Representative Image.

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்ல உள்ளார். 

ஜூன் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தெற்கு ஜெர்மனியில் உள்ள அல்பைன் கோட்டையான ஸ்க்லோஸ் எல்மாவுக்கு செல்லும் பிரதமர் மோடி வருகை செல்கிறார். அங்கு நடக்கும் ஜி7 மாநாட்டில் உக்ரைன் நெருக்கடி மற்றும் இந்தோ-பசிபிக் நிலைமை உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் ஏழு பணக்கார நாடுகளின் குழுவான G7 இன் தற்போதைய தலைவராக ஜெர்மனி உள்ளது. இந்த குழுவில் ஜெர்மனி தவிர இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. 

இந்தியா இதில் உறுப்பு நாடு இல்லையென்றாலும், ஜெர்மனியின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நேரடியாக கலந்துகொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

"உச்சிமாநாட்டின் போது, ​​சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு அமர்வுகளில் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் காலமான ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜெர்மனியில் இருந்து ஜூன் 28-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் மோடி. பின்னர் அங்கிருந்து இந்தியா திரும்பும் வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்