Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நான் சாதாரண ஆளுப்பா.. நிருபர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய அமைச்சர் கே.என்.நேரு!!

Sekar September 04, 2022 & 18:00 [IST]
நான் சாதாரண ஆளுப்பா.. நிருபர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய அமைச்சர் கே.என்.நேரு!!Representative Image.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழனியை எப்போது தனி மாவட்டமாக அறிவிப்பீர்கள் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ''நான் சாதாரண ஆளுப்பா, எல்லாம் முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.'' என பதிலளித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. 

இதன்பிறகு செய்தியாளர்கள் அமைச்சர் நேருவிடம், பழனியை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த நேரு, ''நான் சாதாரண ஆளுப்பா, எல்லாம் முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்று கூற, அங்கிருந்த நிருபர்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.

மேலும் பேசிய அமைச்சர் நேரு, "திண்டுக்கல் மாநகராட்சி, நத்தம், வடமதுரை, தாடிக்கொம்பு, அகரம், பாளையம் பேரூராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மேம்படுத்த, 133 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்துார் பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, 525 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக, 930 கோடி ரூபாயில் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், விவசாயிகள் எதிர்ப்பதால், இந்த திட்டத்தை காவிரியிலிருந்து செயல்படுத்த ஆய்வு நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் 10.15 கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் பல அதிகாரிகள் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்