Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த உத்தரவு

Baskarans Updated:
வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த உத்தரவுRepresentative Image.

சென்னை: எலி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தை ஓட்டியுள்ள தமிழக கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தொட்டிகளில் குளோரின் பயன்படுத்தப்பட்டு சுத்தமாக வைத்திருக்கப்படுகிறதா? எனக் கண்காணிக்க வேண்டும்.

கேரள மருத்துவமனைகளில் அதிகளவில் தொற்று ஏற்பட்டு மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வருவதால் தடுப்பு நடவடிக்கை அதி தீவிரமாக இருக்க வேண்டும். பொது இடங்கள், வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு லேசாக காய்ச்சல், சளி தொல்லை இருந்தால், மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

இந்த எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு  நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்