Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.!

madhankumar May 22, 2022 & 13:02 [IST]
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.!Representative Image.

சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுவரை நிரந்தரமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒப்பந்தம் ஊழியர்களுக்கும் 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி 2448 சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை சுகாதார பணியாளர்கள் ரூபாய் 11,000 என்று ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இனி அந்த ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்