Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் பெரிய கருப்பன் அதிரடி அறிவிப்பு!

KANIMOZHI Updated:
நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் பெரிய கருப்பன் அதிரடி அறிவிப்பு!Representative Image.

சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை ஆய்வு கூட்டம் நடைபெற்றது, அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், தமிழ்நாட்டில் திமுக அறிவித்த கூட்டுறவு வங்கி வைக்கபட்ட 5 சவரன் நகைக்கடன்  தள்ளுபடி இதுவரை 5 ஆயிரத்து 13 கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார். 


கடந்த ஆண்டு விவசாய கடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 292 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும்,  இந்தாண்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் 12,000 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கபட்டதில் 8941.13 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 11.72 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 

 மேலும்  மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 7ம் தேதி கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது, இது கூட்டுறவு சங்க தேர்தல் முறையை சீர்த்திருத்தல், கூட்டுறவு சங்கத்தில் வெளிப்படை தன்மை, நிர்வாகத்தை வலுபடுத்துதல் தொடர்பாக இருந்தது, இது மாநில அரசுகளின் உரிமைகளை பரிக்கும் நிலைகுழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன் மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பிடிங்கி வருகிறது, கூட்டுறவு திருத்த சட்டமசோதா விவகாரத்தில் மாநில உரிமையை தமிழக முதலமைச்சர் விட்டுகொடுக்கமாட்டார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை