Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேரறிவாளன் விடுதலைக்கு காரணம்...முதல்வர் ஸ்டாலின் தான்...அமைச்சர் பொன்முடி!

madhankumar May 20, 2022 & 11:39 [IST]
பேரறிவாளன் விடுதலைக்கு காரணம்...முதல்வர் ஸ்டாலின் தான்...அமைச்சர் பொன்முடி!Representative Image.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலைக்கு காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என திருவாரூரில் நடந்த திமுக பொது கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்ததையொட்டி இன்று தமிழகம் முழுவது சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டனர்.

நெல் கொள்முதல் விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு செய்த அளவிற்கு எவரும் செய்யவில்லை. நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு எவ்வளவு இருந்தது தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். மேலும் பாஜகவிடம் மடிப் பிச்சை கேட்கிறது திமுக என ஓ.எஸ். மணியின் கூறுகிறார். கலைஞர் காலத்திலிருந்து அனைவரையும் எதிர்த்து வளர்ந்த கட்சி திமுக மேலும் விவசாயிகளுக்கு எதுவும் இந்த திமுக அரசு செய்யவில்லை, விவசாயிகளை கைவிட்டுவிட்டது இந்த அரசு என முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ். மணியன் கூறுகிறார். சட்டமன்றத்திலேயே ஒலிக்காத இந்த மணியன் இங்கே வந்து ஒலித்துக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் பேரறிவாளன் விடுதலையாவதற்கு காரணமாக இருந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். ஆனால் எதிர்க்கட்சிகள் நாங்கள்தான் தீர்மானம் நிறைவேற்றினோம் என கூறிவருகின்றனர். தீர்மானம் நிறைவேற்றி 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் தான் அதிமுகவினர், ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் பல சட்ட போராட்டங்களை நடத்தி பேரறிவாளனை வெளியே கொண்டுவந்துள்ளார் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்