Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..!!

madhankumar May 20, 2022 & 06:46 [IST]
ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..!!Representative Image.

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் கோவை ஆக்கியமாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் விசைத்தார்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாவு நுழை பயன்படுத்து ஆடைக்காய் நெசவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென நூல்களின் விலை அதிகரித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பல்வேறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நூல் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் கோவை, மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் விசைத்தறிகள் 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகும். ஏற்கனவே 50% வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம் என பல போராட்டங்களை செய்தும் பலனளிக்காததால், இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை , திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து  100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும். மேலும் பஞ்சு மற்றும் நூல் விலையை குறைத்திட இந்த மூலம் மத்திய அரசிற்கு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்