Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில் பாலாஜி அமைச்சர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்-முதல்வர் பதில் கடிதம்

Baskarans Updated:
செந்தில் பாலாஜி அமைச்சர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்-முதல்வர் பதில் கடிதம் Representative Image.

சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அமலாகத்துறைக்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி ஆளுநர் மே மாதம் 31ஆம் தேதி முதல்வருக்கு கடிதம் எழுதினார். அதற்கு வழக்கு உள்ள காரணத்தினால் அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை எனப் பதில் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்ததால், அவர் நிர்வகித்து வந்த இரு துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இலகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இலகா மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், இலகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி இலகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து நேற்று மாலை ஆளுநர் உத்தரவிட்டார். பின்னர் நள்ளிரவே அவரே உத்தரவை திரும்ப பெற்றார்.

இது தொடர்பாக கவர்னர், முதல்வர் ஸ்டாலினுக்கு அளித்த கடிதத்தில், 'செந்தில்பாலாஜி விவகாரத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பது விவேகமானது என மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதன் அடிப்படையில் நான் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை நாடி உள்ளேன். இதனால், என்னிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரை, செந்தில்பாலாஜியின் நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது' என விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், தமிழக அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், 'செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்' எனக் குறிப்பிட்டு கவர்னர் ரவிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்