Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“நீ முதல்ல உண்மையா இரு”- அண்ணாமலையை எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி! 

KANIMOZHI Updated:
“நீ முதல்ல உண்மையா இரு”- அண்ணாமலையை எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி! Representative Image.

பாஜக தலைவர் அண்ணாமலை தனது கை கடிகாரம் வாங்கியதற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா??? என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். 

அண்ணாமலை வாட்ச் விவகாரம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று மாலைக்குள் வாட்ச் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000  இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில்  தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக தலைவர் பேசிய வருவதாக குற்றம் சாட்டினார். நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான்.  தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால் பில்லை காட்ட சொல்லுங்கள். 

மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. மடியில் கணம் உள்ளது. நீ முதலில் உண்மையாக இரு. என்றும் தெரிவித்த செந்தில் பாலாஜி பாஜகவினர் வார் ரூம் போட்டு தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்ன குற்றம் சாட்டினார்.மின்சார துறை மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் மின்வாரியம் சரி செய்ய தயாராக இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்று, ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

மேலும் அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது என்றும் அதற்கான பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும் என சவால் விடுத்தார்.அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை தான் தெரிவிப்பதாக கூறினார்

பாஜகவினர் எழுப்பிய கேள்வி குறித்த பதிலுக்கு தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சியில் உள்ள நபர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்