Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

MK Stalin Latest News: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…! ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…

Gowthami Subramani May 15, 2022 & 16:18 [IST]
MK Stalin Latest News: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…! ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…Representative Image.

MK Stalin Latest News: சென்னை கோயம்பேட்டிலிருந்து, விழுப்புரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்தது. இந்தப் பேருந்தில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் நடத்துனராகப் பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் பணிபுரிந்த சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆரம்பம் முதலே பயணச்சீட்டு வாங்காமல் இருந்துள்ளார்.

திரும்ப திரும்ப பயணச்சீட்டு குறித்துப் பேசிய போது சூனாம்பேடு செல்வதற்கு பயணச்சீட்டு வேண்டும் என்று முருகன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, நடத்துனர் பெருமாள், இந்தப் பேருந்து விழுப்புரம் நோக்கிச் செல்கிறது. சூனாம்பேடு செல்லாது என்றும் கூறியுள்ளார். இதனால், மேல்மருவத்தூர் வந்ததும் இறங்கி அங்கிருந்து வேறு பேருந்து மூலம் சூனாம்பேடு செல்லவும் என்று கூறியுள்ளார். மேலும், மேல்மருவத்தூர் வரை பயணச்சீடு எடுக்கவும் என்றும் கூறினார்.

ஆனால், அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த முருகன், சூணாம்பேட்டில் இறக்கிவிட வேண்டும் என்று தகராறு செய்தார். மேலும், பயணச்சீட்டு வாங்கவும் மறுத்துள்ளார். இதனால், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு அறிவுரையையும் ஏற்காமல் தாக்கியுள்ளார். அப்போது மயங்கி விழுந்த நடத்துனர், உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் அவர்களே நேற்று வெளியிட்டல் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்தில் பயணித்த பயணியால் நடத்துனர் உயிரிழந்த சம்பவத்தால் வேதனை அடைந்தேன். இதற்கு ஆறுதல் தெரிவித்து, குடும்பத்துக்கு உடனடியாக ரூ. 10 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்