Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Holiday in Tamilnadu: தமிழகத்தில் மே மாதம் 20 ஆம் நாள் உள்ளூர் விடுமுறை…! அப்போ மாணவர்களுக்கான தேர்வு

Gowthami Subramani May 15, 2022 & 14:17 [IST]
Holiday in Tamilnadu: தமிழகத்தில் மே மாதம் 20 ஆம் நாள் உள்ளூர் விடுமுறை…! அப்போ மாணவர்களுக்கான தேர்வுRepresentative Image.

Holiday in Tamilnadu: நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக், கொரோனா சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்தநிலையில் பல்வேறு இடங்களில் அன்றாட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

124 ஆவது மலர்க் கண்காட்சி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மே மாதம் 20 ஆம் நாள் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்தன.

அதன் படி, மே மாதம் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் முதலே, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அவ்வாறு 275 வகையில் மொத்தம் 5.5 லட்சம் மலர்கள் ஊட்டியில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி மாளிகை, மாடங்கள் போன்றவற்றை அலங்கரிப்பதற்கு பல ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சில சமயத்தில் மழை பொலிவும் இருப்பதால், மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த ஊட்டி மலர் கண்காட்சியை மே மாதம் 20 ஆம் நாள் திறக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். அது மட்டுமல்லாமல், மே மாதம் 20 ஆம் நாள் பள்ளி மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. அதனால், பொதுத் தேர்வு வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதம் 20 ஆம் நாள் சார்நிலை அலுவலகங்கள், மாவட்ட கருவூலம் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவலகங்கள் போன்றவற்றையும் கவனிக்கும் பொருட்டு ஒரு சில முக்கிய பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மே மாதம் 20 ஆம் நாள் விடுமுறை அளிப்பதை ஈடு செய்வதற்காக ஜூன் மாதம் 4 ஆம் நாளான சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....

 

Representative Image.  ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !

Representative Image.  ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

Representative Image.  இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!

Representative Image.  அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை

Representative Image.  ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்