Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Breaking பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்; ட்விட்டரில் உருக்கம்! 

KANIMOZHI Updated:
#Breaking பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்; ட்விட்டரில் உருக்கம்! Representative Image.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ரேசனில் தனது இளையமகனும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான பங்கஜ் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு ஹீராபென்னுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஹீராபென்னின் உடல் நிலை சீரடைந்து வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி தனது தாயாருடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தைச் செலவிட்டார். பிரதமருடன் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலும் உடன் சென்றிருந்தார். 

இந்நிலையில் முன்னதாக, பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் மோடி, தங்கள் தாயின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், காலையில் திரவ உணவு உட்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் கைகள் மற்றும் கால்களை நன்றாக அசைப்பதாகவும், நபர்களை அடையாளம் கண்டுகொண்ட ஹீராபென் மோடி, எழுந்து அமர்ந்து மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட திரவ உணவை உட்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். 

இன்று அவரது சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனைக்குப் பிறகு ஹீராபென் மோடியை டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் காலமானார். 100 வயதான தனது தாயாரின் மரணத்தை பிரதமர் மோடி ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम... मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi

— Narendra Modi (@narendramodi) December 30, 2022

பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்