Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தெலங்கானாவில் குடும்ப அரசியல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...!

madhankumar May 26, 2022 & 15:40 [IST]
தெலங்கானாவில் குடும்ப அரசியல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...!Representative Image.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டில் இந்தியா 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' என்ற கனவோடு முன்னேறி வருகிறது என கூறினார். மேலும் நமது நாட்டில் புதிதாக உருவாகியுள்ள சிறு நிறுவனங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்று புதிய நிறுவனங்கள் அதிகரிப்பதில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா திகழ்கிறது என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் குடும்ப அரசியல் காட்சிகள் எவ்வாறு ஊழல் மயமாகிவருகிறது. அவை எவ்வாறு ஒரு குடும்பத்தை மட்டுமே இயக்கி வருகிறது என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என கூறியுள்ளார். 

'குடும்ப அரசியல் ' கட்சி ஒரு அரசியல் பிரச்சினை மட்டும் இல்லை நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி அது தான். ஒரே குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்துள்ளது. குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என காட்டமாக பேசினார்.

குடும்ப அரசியல் கட்சிகள் தங்களின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் என கூறிய அவர் ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரு குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில் தான் அவர்களின் அரசியல் நோக்கம் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை என கூறியுள்ளார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்