Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரங்கம்மை ஒரு ரெட் அலர்ட்...பாதுகாப்பாக இருங்க...WHO விஞ்ஞானி எச்சரிக்கை..!

madhankumar July 27, 2022 & 14:59 [IST]
குரங்கம்மை ஒரு ரெட் அலர்ட்...பாதுகாப்பாக இருங்க...WHO விஞ்ஞானி எச்சரிக்கை..!Representative Image.

பல நாடுகளில் குரங்கம்மை பரவியதையடுத்து, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. இதனை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலகளவில் கவலையளிக்கும் பொது சுகாதார நிலையாக குரங்கம்மையை அறிவித்தார்.

குரங்கம்மை வைரஸ்:

இந்த குரங்கம்மை வைரஸானது விலங்குகளிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில் இருப்பதை மூலமும், தோற்று பரவிய இடத்தை தொடுவதன் மூலமும், தோற்று பரவியர்வர்களுடன் உடலுறவு கொள்வதன் மூலமும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், குரங்கம்மை பரவலை ரெட் அலர்ட்டாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார். "பெரியம்மை தடுப்பூசி திட்டங்கள் 1979-1980 முதல் நிறுத்தப்பட்டன. பெரியம்மை தடுப்பூசிகள் குரங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, ஐரோப்பிய மருத்துவ சங்கம் பெரியம்மைக்காக உருவாக்கப்பட்ட டெகோவிரிமாட் எனப்படும் வைரஸ் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்கியுள்ளது.

பெரியம்மைக்கான தடுப்பூசிகள் தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறைக்கான தடுப்போகலாக மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மிகக் குறைந்த அளவுகளில் உள்ளன. பெரியம்மை நோய் தற்செயலாக ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் விதமாக சில நாடுகள் இந்த தடுப்பூசிகளை சேமித்து வைத்துள்ளன. 

இந்த தடுப்புசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பரவலாக கையிருப்பு வைத்துள்ளது. மேலும் அமெரிக்காவின் பவேரியன் நோர்டிக் நிறுவனம் 16 மில்லியன் டோஸ்களைக் கொண்டுள்ளது. இது அமெரிக்க கையிருப்பின் ஒரு பகுதியாகும். மேலும் இதனை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

உருமாறிய கொரோனாவை விட இந்த குரங்கம்மை அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இரண்டையும் நேரடியாக ஒப்பீட முடியாது. குரங்கம்மை என்பது வேறு வைரஸ். SARS-CoV-2 போன்ற அதே விகிதத்தில் உருமாற்றம் அடையாது என்பது தெளிவாகிறது. குரங்கம்மை தொற்றுநோயாக மாறுவதைத் தடுக்க வேண்டும். தொடக்க காலத்திலயே அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்