Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உசிலம்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்த தாய்மாமன்

Baskarans Updated:
உசிலம்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்த தாய்மாமன்Representative Image.

மதுரை: உசிலம்பட்டி அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து தாய்மாமன் ஊர்வலமாக வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தென்மாவட்டங்களில் தாய்மாமன் சீர் செய்யும் நடைமுறை வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்,உயிரையும் சொத்தையும் கூட விட்டுக்கொடுக்கலாம் ஆனால் தாய்மாமன் சீர் முறையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் எனக் கூறுவர். ஒவ்வொரு தாய்மாமனும் தனது சகோதரிகளின் குழந்தைகளுக்கான சீர்வரிசை பொருட்களை விதவிதமாக ஊர்வலமாக கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ,ரயில்வே பீட்டர் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் - ஜெயகீதா தம்பதியினர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த ஜெயபிரபு என்ற தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த தாய்மாமன் வீட்டார் மற்றும் அக்கிராமமக்கள் பழங்கால பாரம்பரிய முறைப்படி 7மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் மட்டுமல்லாது காய்கறிகள் பழ வகைகளையும் ஏற்றி வந்தனர்.

மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், முட்டுக்கிடா ஊர்வலம் மற்றும் கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தனர்.பழங்கால பாராம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்