Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Viral News: பால் பவுடர் தட்டுப்பாட்டால், தாய்ப்பாலை விற்று பலரின் வயிற்றில் பாலை வார்த்த தாய்...!!!

Nandhinipriya Ganeshan May 17, 2022 & 18:32 [IST]
Viral News: பால் பவுடர் தட்டுப்பாட்டால், தாய்ப்பாலை விற்று பலரின் வயிற்றில் பாலை வார்த்த தாய்...!!!Representative Image.

Viral News: இந்த உலகில் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியக குழந்தைகளுக்கு உணவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பால் பவுடர் தான். அந்த வகையில், அமெரிக்காவில் பல குடும்பங்களும் தங்களது கைக்குழந்தைகளுக்கு பால் பவுடரையே அடிப்படை உணவாக அளித்து வருகின்றனர். ஆனால், தற்போது பால் பவுடரின் கடுமையான தட்டுப்பாட்டுடன் அமெரிக்கா போராடி வருகிறது. உலகநாடுகளின் வல்லரசு நாடான அமெரிக்காவில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் திணறி வருகின்றனர், மேலும் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். பால் பவுடரை தயாரித்து வந்த முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியதுடன், ஆலையை முடியதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நெருக்கடிக்கு மத்தியில், உட்டாவை சேர்ந்த ஒரு தாய் தனது சொந்த தாய்ப்பாலை விற்று பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.

Alyssa Chitti என்ற பெண், தற்போது குழந்தைகளுக்கான பால் பற்றாக்குறையின் போது தாய்மார்கள் படும் கஷ்டங்களைப் பற்றி அறிந்து கொண்டு தனது சொந்த தாய்ப்பாலை வழங்க திட்டமிட்டுள்ளார். அலிசா தன்னிடம் தற்போது 4,000 அவுன்ஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் 118 லிட்டர் தாய்ப்பாலை சேமித்து வைத்துள்ளார்.

அதாவது, அலிசா ஒரு இளம் தாய்... இவருக்கு தாய்ப்பால் உற்பத்தி வழக்கமாக சுரப்பதை அதிகமாகவே சுரந்துள்ளது. அதை வீணாக்காமல், சேகரித்தும் வைத்துள்ளார். அவை கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரீசரில் வைத்து, தேவைப்படுவோருக்கு ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ஒரு டாலருக்கு விற்று வருகிறாராம். பச்சிளம் குழந்தைகளின் பசியை புரிந்து தனது சொந்த பாலை விற்பனை செய்யும் இந்த இளம் தாய்க்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்