Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மும்பை – கோவா வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..! | Mumbai – Goa Vande Bharat Train

Priyanka Hochumin Updated:
மும்பை – கோவா வந்தே பாரத் ரயில்: கிளம்பும் நேரம், வந்தடையும் நேரம், டிக்கெட் விலை எல்லா விவரமும்..! | Mumbai – Goa Vande Bharat TrainRepresentative Image.

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் திட்டம் தற்போது ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பை முதல் கோவா நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜூன் 3 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட வேண்டியது. ஆனால் ஒடிசா ரயில் விபத்து காரணமாக சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் மும்பை முதல் கோவா வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம்.

வழி: 

இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. பொதுவாக மும்பை - கோவா [586 கி.மீ தூரம்] பயண நேரம் கிட்டத்தட்ட 11-12 மணிநேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 8 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

மும்பை - கோவா [எண்: 22229]

 

கோவா - மும்பை [எண்: 22230]

ஜூன் 27, 2023

வெள்ளிக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

586 கிமீ

08.00 மணி நேரம்

05.25 PM - 03.30 PM

 

12.20 PM - 10.25 PM

 

மும்பை - கோவா வந்தே பாரத் ரயில் நேர அட்டணை [எண்:22229]: 

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் நிலையத்தில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் கோவாவின் மட்கான் ஸ்டேஷனை மாலை 3.30 மணிக்கு வந்தடையும்.

மும்பை - கோவா [எண்: 22229]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

மும்பை

-

05.25 AM

தாதர்

05.32 AM

05.34 AM

தானே

05.52 AM

05.54 AM

பன்வெல்

06.30 AM

06.32 AM

கெத்

08.48 AM

08.50 AM

ரத்னகிரி

10.40 AM

10.45 AM

கன்காவலி

12.45 PM

12.47 PM

திவிம்

02.24 PM

02.26 PM

மட்கான்

03.30 PM

-

 

கோவா - மும்பை வந்தே பாரத் ரயில் நேர அட்டணை [எண்:22230]: 

கோவாவின் மட்கான் ஸ்டேஷனில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் நிலையத்தை இரவு 10.25 மணிக்கு வந்தடையும்.

கோவா - மும்பை [எண்: 22230]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

மட்கான்

-

12.20 PM

திவிம்

01.06 PM

01.08 PM

கன்காவலி

02.18 PM

02.20 PM

ரத்னகிரி

04.55 PM

05.00 PM

கெத்

06.40 PM

06.42 PM

பன்வெல்

09.00 PM

09.02 PM

தானே

09.35 PM

09.37 PM

தாதர்

10.05 PM

10.07 PM

மும்பை

10.25 PM

-

கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, மும்பை முதல் கோவா வரை செல்ல சேர் காரில் ரூ.1815 (ரூ.379 உணவு கட்டணம் உட்பட) வசூலிக்கப்படுகிறது. அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.3360 (ரூ.434 உணவு கட்டணம் உட்பட) வசூலிக்கப்படுகிறது. 

மறுமார்க்கமாக, கோவா முதல் மும்பை வரை செல்ல சேர் காரில் ரூ.1970 (ரூ.530 உணவு கட்டணம் உட்பட) கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.3535 (ரூ.613 உணவுக் கட்டணம் உட்பட) கட்டணமாக வசூலிக்கப்படும். 

 

வந்தே பாரத் ரயில்

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

மும்பை - கோவா [எண்:22229]

ரூ. 1815

ரூ. 3360

கோவா - மும்பை [எண்:22230]

ரூ. 1970

ரூ. 3535


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்