Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மும்பை - சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Mumbai - Shirdi Vande Bharat Train

Nandhinipriya Ganeshan Updated:
மும்பை - சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில்: எத்தனை மணிக்கு புறப்படும்? டிக்கெட் விலை எவ்வளவு? | Mumbai - Shirdi Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே 'வந்தே பாரத் திட்டம்' என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. 

பிப்ரவரி 10.2023 அன்றிலிருந்து இந்தியாவின் 10வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மும்பை முதல் சாய்நகர் ஷீரடி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களை விட 01.40 மணி நேரத்திற்கு முன்னதாகவே மும்பையில் இருந்து சாய்நகர் ஷீரடி சென்றடைந்துவிடுகிறது. இந்த பதிவில் மும்பை - சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிபரங்களை பார்க்கலாம். 

வழி: 

இந்த ரயில் வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து சாய்நகர் ஷீரடி செல்லும் இந்த ரயில் மும்பை தாதர் சென்ட்ரல், தானே (Thane), நாசிக் ரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பொதுவாக மும்பை - சாய்நகர் ஷீரடி [343 கி.மீ தூரம்] பயண நேரம் 7 மணிநேரம் ஆகும். ஆனால், வந்தே பாரத் வெறும் 5.20 மணி நேரத்தில் சென்றுவிடுகிறது. 

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

மும்பை - சாய்நகர் ஷீரடி [எண்: 22223]

 

சாய்நகர் ஷீரடி - மும்பை [எண்: 22224]

பிப்ரவரி 10, 2023

செவ்வாய் கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயங்கும்

343 கிமீ

5.20 மணி நேரம்

06.20 AM - 11.40 AM

 

05.25 PM - 10.50 PM

 

மும்பை - சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில் நேர அட்டணை [எண்:22223]: 

தினமும் காலை 06.20 மணிக்கு மும்பை CSMT -யிலிருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 06.30 மணிக்கு மும்பை தாதர் சென்ட்ரலை சென்றடையும். காலை 06.32 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 06.49 க்கு தானே ரயில் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து காலை 06.51 மணிக்கு புறப்பட்டு காலை 08.57 க்கு நாசிக் ரோடு ரயில் நிலைத்தை அடையும். பின்னர், அங்கிருந்து 08.59 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணிக்கு சாய்நகர் ஷீரடி ரயில் நிலைத்தை வந்தடையும். 

மும்பை - சாய்நகர் ஷீரடி [எண்: 22223]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

மும்பை

-

06.20 AM

மும்பை தாதர் சென்ட்ரல்

06.30 AM

06.32 AM

தானே

06.49 AM

06.51 AM

நாசிக் ரோடு

08.57 AM

08.59 AM

சாய்நகர் ஷீரடி

11.40 AM

-

 

சாய்நகர் ஷீரடி - மும்பை வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை [எண்:22224]:

மறுமார்க்கமாக சாய்நகர் ஷீரடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 05.25 புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 07.25 மணிக்கு நாசிக் ரோடு ரயில் நிலைத்தை வந்தடைகிறது. பின்னர், இரவு 07.27க்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.06 மணிக்கு தானே சென்ட்ரலையும், இரவு 10.28 மணிக்கு மும்பை தாதர் சென்ட்ரலையும் வந்தடைகிறது. 10.30 க்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு மும்பை CSMT ரயில் நிலையத்தை வந்தடையும். 

சாய்நகர் ஷீரடி - மும்பை [எண்: 22223]

வந்தடையும் நேரம்

புறப்படும் நேரம்

சாய்நகர் ஷீரடி

-

05.25 PM

நாசிக் ரோடு

07.25 PM

07.27 PM

தானே

10.06 PM

10.08 PM

மும்பை தாதர் சென்ட்ரல்

10.28 PM

10.30 PM

மும்பை

10.50 PM

-

 

கட்டணம்: 

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணம் பயண வகுப்பை பொறுத்து மாறுபடும். அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலில் சாய்நகர் ஷீரடி முதல் மும்பை CSMT சென்ட்ரல் வரை செல்ல சேர் காரில் ரூ.1130 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.290 உணவு கட்டணமும் அடங்கும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.2,020 வசூலிக்கப்படுகிறது. இதில் 359 ரூபாய் உணவு கட்டணமும் அடங்கும்.

மறுமார்க்கமாக, மும்மை CSMT முதல் சாய்நகர் ஷீரடி வரை செல்ல சேர் காரில் உணவு கட்டம் ரூ.135 சேர்த்து ரூ.975 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவு கட்டணம் ரூ.170 சேர்த்து ரூ.1840 கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது.

 

வந்தே பாரத் ரயில்

உணவு கட்டணம் இல்லாமல்

உணவு கட்டணம் சேர்த்து

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

சேர் கார்

எக்ஸிகியூட்டிவ் வகுப்பு

மும்பை - சாய்நகர் ஷீரடி [எண்:22223]

ரூ.840

ரூ.1670

ரூ.975

ரூ.1840

சாய்நகர் ஷீரடி - மும்பை [எண்:22224]

ரூ.840

ரூ.1661

ரூ.1130

ரூ.2020


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்