Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

OpenAI நிறுவனத்தின் சிஇஓ -உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. என்னவா இருக்கும்?

Nandhinipriya Ganeshan Updated:
OpenAI நிறுவனத்தின் சிஇஓ -உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. என்னவா இருக்கும்?Representative Image.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான ஓபன்ஏஐ [OpenAI] நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான சாம் ஆல்ட்மேனை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 8 ஆம் தேதி சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சால் ஆல்ட்மேன், 'இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைந்து வருகிறது என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட உரையாடல் மிகச்சிறப்பாக இருந்தது. பிரதமர் அலுவல அதிகாரிகளுடனான ஒவ்வொரு சந்திப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது' எனத் தெரிவித்திருந்தார்.

இவருடைய பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, 'இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இளைஞர்கள் மத்தியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். எங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, தொழில்நுட்ப மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் சேட்ஜிபிடி எனும் செயலியை உருவாக்கிய நிறுவனம் தான் OpenAI. இதோடு, ஜிபிடி-4, டால்-இ, ஓபன்ஏஐ-5, ஓபன்ஏஐ கோடெக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களையும் இந்நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்