Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர் சமூகம் சேர்ப்பு.. மத்திய அரசு ஒப்புதல்!!

Sekar September 14, 2022 & 16:19 [IST]
பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர் சமூகம் சேர்ப்பு.. மத்திய அரசு ஒப்புதல்!!Representative Image.

பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகம் உள்ளிட்ட சமூகங்களை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்துள்ளதாக, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

நரிக்குறவர் சமூகத்தினரை தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைத்துள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள மற்ற சமூகத்தினருடன் போட்டி போட்டு, அவர்களால் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேற முடியாத சூழல் நிலவியது.

அவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், அவர்களை பட்டியலினத்தவர்களாக அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுபவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்ட தெரிவித்துள்ளார். இதன் மூலம் நரிக்குறவர் சமூகத்துக்கும் இனி பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் கடந்த 2016 ஆம் ஆண்டே இதற்கு மத்திய அமைச்சரவை ஒருமுறை ஒப்புதல் அளித்து, அது நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு பிறகு அந்த மசோதா என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை மீண்டும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் விரைவில் சட்டமாக வேண்டும் என நரிக்குறவர் சமூகம் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்