Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

National Doctor's Day 2022: நம் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களை போற்றும் நாள் இது! எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Priyanka Hochumin July 01, 2022 & 10:30 [IST]
National Doctor's Day 2022: நம் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களை போற்றும் நாள் இது! எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?Representative Image.

National Doctor's Day 2022: மக்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிந்து, அதை குணப்படுத்தி, மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கற்பித்து நம்மை பாதுகாக்கும் அனைத்து மருத்துவர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் போன்றவர்களுக்கு 'தேசிய மருத்துவர் தினம்' வாழ்த்துக்கள்.

பொதுவாக யார் என்று தெரியாத ஒருவருக்கு உதவி செய்தாலே, உதவி செய்தவர் அவர்களுக்கு கடவுள் போன்றவர். அப்படி இருக்கையில் யார் என்று தெரியாதவர்களின் உயிரை காப்பாற்றுபவர் தெய்வத்திற்கு மேல் என்று கூறுவார்கள். அது உண்மை தான், ஏனெனில் இந்த உலகில் கடவுள் படைத்த உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள் என்றும் மக்களால் மதிக்கப்பட வேண்டும்.

எதனால் கொண்டாடப்படுகிறது

அப்படி நடக்க வேண்டும் என்பதால் தான் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் தேதி 'தேசிய மருத்துவர் தினம்' கொண்டாடப்படுகிறது. காரணம்? இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதல் டாக்டர் பிதான் சந்திர ராய் அல்லது பி.சி. ராய் அவர்களை நினைவு கொள்ள ஜூலை 1 ஆம் தேதி 'தேசிய மருத்துவர் தினம்' கொண்டாடப்படுகிறது. இவர் ஜூலை 1, 1882 அன்று பாட்னவில் பிறந்தார். பின்பு ஜூலை 1, 1962 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இறந்தார். இவரின் பிறப்பு மற்றும் இறப்பு இரண்டுமே ஜூலை 1 அன்று இருப்பதால் அந்த நாளை 'தேசிய மருத்துவர் தினம்' ஆக கொண்டாட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) முடிவெடுத்துள்ளது.

பி.சி. ராய் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அது மட்டுமின்றி 1948 முதல் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராகவும் பணி புரிந்துள்ளார். வரலாற்றில் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸில் உறுப்பினராக இருந்த ஒரு சிலருள் இவரும் ஒருவர்.

தேசிய மருத்துவர் தினத்தின் முக்கியத்துவம்

இந்த உலகத்தில் நடந்த மிகவும் கொடூரமான ஒன்று கோவிட். கடந்த மூன்று ஆண்டுகளாக உலகில் இருக்கும் அனைவரையும் துன்புறுத்திக்கொண்டு இருக்கும் வைரஸிடம் இருந்து தங்களைப் பற்றி கவலைக் கொள்ளாம் நம்மை காப்பாற்ற பாடுபட்டு வருகின்றனர். இதில் நிறைய மருத்துவர்கள் தங்களிப்பின் உயிரை இழந்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து செவிலியர்கள் என்று ஏராளமானோர் சேவை செய்து வந்துள்ளனர்.

இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று மருத்துவர்களுக்கு பாராட்டுகளும், தொலைக்காட்சியில் அவர்களை கௌரவிக்கும் வகையில் பேட்டிகளும் எடுக்கப்படும். மேலும் ஃபிரீ கேம்ப்கள் உருவாக்கி மக்களுக்கு தங்களின் கருத்துகளை தெரிவித்து வருவார்கள்.

நம் அனைவரையும் காக்க அயலாது உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் 'தேசிய மருத்துவர் தினம்' வாழ்த்துக்கள்.

National Doctor's Day 2022, doctors day 2022, doctors day 2022 in india, doctors day 2022 theme, doctors day 2022 quotes, when is doctors day celebrated in india, why 1st july is celebrated as doctor's say, who is the first doctor of our country, how is doctors day celebrated?  

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்