Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பணத்தை ஏப்பம் விட்ட போன் பே.. வழக்கு தொடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்தது என்ன?

Sekar June 30, 2022 & 14:42 [IST]
பணத்தை ஏப்பம் விட்ட போன் பே.. வழக்கு தொடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்தது என்ன?Representative Image.

போன் பே மூலம் அனுப்பிய பணம் உரிய கணக்கில் சேராதது குறித்து தொடரப்பட்ட வழக்கில் போன் பே மற்றும் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 35 வயதான செந்தில்குமார் எஸ்பிஐயில் கணக்கு வைத்துள்ளார். இவர் கடந்த 2017 ஜனவரி 3 ஆம் தேதி போன் பே மூலம் கணேசன் எனும் நண்பரின் கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். நண்பரின் கணக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ளது.

முதலில் செந்தில்குமார் ரூ.5,000 அனுப்பிய நிலையில், அது நண்பரின் கணக்கில் சேர்ந்துவிட்டது. அடுத்து ரூ.9,500 அனுப்ப அது நண்பரின் வங்கிக் கணக்கில் சேரவில்லை. ஏதோ தொழில்நுட்ப கோளாறாக இருக்கும், தாமதாக சென்றுவிடும் என நினைத்த நிலையில், அந்த பணம் நண்பரின் கணக்கில் சேரவில்லை. இதனால் அடுத்த நாள் அதே போன் பே மூலம் மீண்டும் ரூ.9,500 அனுப்பியுள்ளார்.

இந்த முறை பணம் சென்றுவிட்டது. ஆனால் முன்னர் அனுப்பிய ரூ.9,500 நண்பரின் கணக்கிலும் சேரவில்லை, தனக்கும் திரும்பி வரவில்லை என்பதால், கணேசன் போன் பே மற்றும் எஸ்பிஐ வங்கியில் புகார் தெரிவித்துள்ளார். பல முறை அவர் தொடர்புகொண்டும் எந்த நடவடிக்கையும் இல்லை பணமும் திரும்பி வந்த பாடில்லை.

இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார், கடந்த 2019 ஜூலை 26 ஆம் தேதி திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா மற்றும் உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர், ரூ. 9,500 உடன், செந்தில்குமாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய் என மொத்தம் 1,14,500 ரூபாயை வழக்கு தொடுத்த நாளில் இருந்து, 12 சதவீத வட்டியுடன் சேர்த்து போன் பே மற்றும் எஸ்பிஐ வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்