Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாம் அவருக்குத் தான் தெரியும்.. இறந்தவரை கைகாட்டி எஸ்கேப்பாகும் ராகுல் காந்தி?

Sekar June 16, 2022 & 13:05 [IST]
எல்லாம் அவருக்குத் தான் தெரியும்.. இறந்தவரை கைகாட்டி எஸ்கேப்பாகும் ராகுல் காந்தி?Representative Image.

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் கையகப்படுத்தியது தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் மறைந்த முன்னாள் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா தான் பொறுப்பு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கிரிமினல் பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி கடந்த 3 நாட்களில் சுமார் 30 மணி நேரம் அமலாக்கத்துறையின் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவர் இன்று மீண்டும் ஏஜென்சி முன் ஆஜராக உள்ளார்.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் மூலம் வெளியிடப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை பின்னர் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டது. நேஷனல் ஹெரால்ட் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ஊடகமாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பமாக இயங்கும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட பலரும் யங் இந்தியனில் புரமோட்டர்கள் மற்றும் பங்குதாரர்களாக உள்ளனர்.

சோனியாவும் ராகுலும் இணைந்து யங் இந்தியன் நிறுவனத்தில் 76% பங்குகளை வைத்துள்ளனர். மீதமுள்ள 24% வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு சொந்தமானது. வோரா மற்றும் பெர்னாண்டஸ் முறையே 2020 மற்றும் 2021 இல் காலமானார்கள்.

ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜரான நிலையில், சோனியா காந்தியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் அமலாக்கத்துறை முன்பு தற்போதுவரை ஆஜராகவில்லை. 

இந்நிலையில் ராகுல் காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யங் இந்தியன் மற்றும் ஏஜேஎல் நிறுவனங்களின் பங்குதாரர் முறை, நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் புரமோட்டர்களின் பங்கு ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அனைத்தும் மோதிலால் வோராவுக்கு மட்டும் தான் தெரியும் என ராகுல் காந்தி கூறியதாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கிடையே, ராகுல் காந்தி மீதான இந்த விசாரணை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்கிறது என்றும், இதை வைத்து பாஜக அரசால் காங்கிரஸை முடக்கிவிட முடியாது என்றும் கூறி காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்