Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. சீல் வைத்த அமலாக்கத்துறை.. காங்கிரஸ் தலைமை அலுவலகம் விரைந்த சீனியர் தலைவர்கள்!!

Sekar August 03, 2022 & 20:19 [IST]
பரபரப்பு.. சீல் வைத்த அமலாக்கத்துறை.. காங்கிரஸ் தலைமை அலுவலகம் விரைந்த சீனியர் தலைவர்கள்!!Representative Image.

நேஷனல் ஹெரால்டு தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஹெரால்டு ஹவுஸ் கட்டிடத்தில் உள்ள யங் இந்தியன் அலுவலகத்துக்கு அமலாக்க இயக்குனரகம் இன்று சீல் வைத்தது.

சோதனையின் போது வளாகத்தில் யாரும் இல்லாததால் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், இதனால் அவர்களால் தேடுதலை முடிக்க முடியவில்லை என்றும் அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமலாக்கத்துறையின் முன் அனுமதியின்றி வளாகத்தை திறக்கக் கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததாக தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என்றும், யங் இந்தியன் அலுவலகத்திற்கு தான் சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணைக்கு மத்தியில் அமலாக்க இயக்குனரகம் திங்கள்கிழமை நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் சோதனை நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் மற்றும் சோனியா காந்தியின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், "டெல்லி காவல்துறை ஏஐசிசி தலைமையகத்திற்கு செல்லும் சாலையை மறிப்பது விதிவிலக்காக இல்லாமல் வழக்கமாகிவிட்டது! ஏன் அப்படி செய்தார்கள் என்பது மர்மமாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தும் இந்த விவகாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, "பணமோசடி விசாரணையைப் பொறுத்தவரை, பணம் இல்லாததால் இந்த விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்று நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். பணம் இல்லை என்றால், எப்படி மோசடி நடக்கும்?" என்று கூறியுள்ளார்.

“அதிகாரப்பூர்வமாக எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வோம். எங்கள் செய்தித் தொடர்பாளர் பேசுவார். விவாதம் நடத்த வேண்டும், அதைச் செய்வோம். சீல் வைக்க எந்தக் காரணமும் இல்லை. காரணம் வெளியே வரும். யாரும் மறைத்து வைத்து தாக்க முடியாது. இந்த நாடு அறிந்து கொள்ளும்” என்று குர்ஷித் மேலும் கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சல்மான் குர்ஷித், திக்விஜய சிங், ப சிதம்பரம் மற்றும் பலர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு விரைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்