Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,158.16
-181.28sensex(-0.24%)
நிஃப்டி22,523.75
-46.60sensex(-0.21%)
USD
81.57
Exclusive

பத்திரிகை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும்.. தேசிய பத்திரிகை தினம் - வரலாறு!

Nandhinipriya Ganeshan November 16, 2022 & 13:19 [IST]
பத்திரிகை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும்.. தேசிய பத்திரிகை தினம் - வரலாறு!Representative Image.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதே இந்த பத்திரிகைகளும் ஊடகங்களும் தான். இவை இல்லையென்றால், நம் நிலைமையை நினைத்து பாருங்கள். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் ஊடங்களை போற்ற வேண்டியது நம் கடமை அல்லவோ? 

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா - Press Council of India (1966 ஆம் ஆண்டு) செயல்படத்துவங்கிய தினமான நவம்பர் 16 ஆம் தேதியையே ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பத்திரிகை தினம்' ஆக கொண்டாடப்படுகிறது. இந்தியா விடுதலை பெற்றபிறகு பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் விடிவுகாலம் பிறந்தது எனலாம். அதன்பின் உருவான இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியில் எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக அறிவித்தது.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், மக்களின் பிரச்சனைகளை அரசிற்கும் சமூகத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதிலும், நாட்டில் நிலவும் குற்றங்கள், மோசடிகள், ஊழல்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம் விளங்குகிறது. 

அதன்படி, ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கவுரவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கம். 

"உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும்". 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்