Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

National Simplicity Day 2023: அதென்ன எளிமை தினம்? இந்த நாள் கொண்டாட என்ன காரணம்..?

Nandhinipriya Ganeshan July 08, 2023 & 10:15 [IST]
National Simplicity Day 2023: அதென்ன எளிமை தினம்? இந்த நாள் கொண்டாட என்ன காரணம்..?Representative Image.

National Simplicity Day 2023: நமது வாழ்க்கைப் பயணத்தை சிறப்பானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் அமைத்துக் கொள்ள எளிமையான வாழ்க்கை முறையே உதவும். ஆனால், தொழில்நுட்பம் என்ற பெயரில் நமது உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சம் நாமே அளித்து கொண்டு வருகிறோம் என்று யாரும் உணர்வதில்லை. அதற்கு உதாரணம் இந்த ஸ்மார்ட் ஃபோன் தாங்க. ஒருநாள் பயன்படுத்தவில்லை என்றாலும் பையித்தியம் பிடிக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இப்படி அனைத்து சூழ்நிலைகளும் மனித வாழ்க்கையை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இத்தகைய பரபரப்பான வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விலகி ஒரு மனிதர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள கான்கார்ட்டி என்ற இடத்தில் 1817 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தவர் தான் ஹென்றி டேவிட் தோரே. இவர் ஒரு பிரபலமான அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கைவாதி, தத்துவவாதி, கவிஞர், சர்வேயர், வரலாற்றாசிரியர் என பன்முகத்தன்மை படைத்தவர்.

இன்றைய காலத்தில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட தொழில்நுட்பத்தை, ஒரே அடியாக விலக்கி வைக்க முடியாது. ஆனால், அவற்றின் தேவையை குறைத்துக்கொள்ள முடியும். எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு என்ற ஒன்று உண்டு. வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையை அறிந்து, அதற்கு ஏற்றவாறு செயல்படும்போது மனம் அமைதி பெறும்.

இத்தகைய கருத்துக்களை முன்வைத்து, எந்தவித தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தாமல் காடுகளில் தனிமையில் இயற்கையோடு தங்கியிருந்த அனுபவத்தை புத்தமாக வெளியிட்டார். இதனையடுத்து, தனது வாழ்நாள் முழுவதும் எளிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஹென்றி டேவிட் தோரோவின் பிறந்த நாளை “தேசிய எளிமை நாள்” ஆக அமெரிக்காவில் அனுசரிக்கபட்டது. அதுவே நாளடைவில் உலகளவில் பல இடங்களில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை தான் இந்த நாள் வலியுறுத்துகிறது. மேலும், நம்மைச் சுற்றியுள்ள சூழல் எப்படி இருந்தாலும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். அந்தவகையில் நமக்கான நேரத்தை ஒதுக்கி, நம்முடிடைய தேவையின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட்டால், “எளிமை” என்பது எப்போதும் சாத்தியமே. முயற்சிப்போம்! நலமுடன் வாழ்வோம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்