Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புதிய 75 ரூபாய் நாணயம் அறிமுகம்.. எப்படி இருக்கும் தெரியுமா? | 75 Rupees Coin in India

Nandhinipriya Ganeshan Updated:
புதிய 75 ரூபாய் நாணயம் அறிமுகம்.. எப்படி இருக்கும் தெரியுமா? | 75 Rupees Coin in IndiaRepresentative Image.

இந்தியாவில் புதிதாத கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, 75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

75 ரூபாய் நாணயம் எப்படி இருக்கும்?

புதிய நாணயத்தின் விட்டம் 44 மிமீ மற்றும் அது 200 செர்ஷன்களைக் கொண்டிருக்கும். நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் ஆகியவற்றால் உருவாக்கப்படும். நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னம் இருக்கும், அதன் கீழே 'சத்யமேவ ஜெயதே' என்ற வார்த்தை ஹிந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும். இடது பக்கத்தில் 'பாரத்' என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், வலதுபுறத்தில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

புதிய 75 ரூபாய் நாணயம் அறிமுகம்.. எப்படி இருக்கும் தெரியுமா? | 75 Rupees Coin in IndiaRepresentative Image

நாணயத்தின் நடுவில் சர்வதேச எண்களில் ரூபாயின் மதிப்பான 75 என்ற எண் இடம்பெற்றிருக்கும். நாணயத்தின் பின்புறம் நாடாளுமன்ற வளாகத்தின் படம் இருக்கும். "சன்சாத் ஸ்னகுல்' என்ற எழுத்து மேல் சுற்றளவில் தேவநாக்ரி எழுத்திலும், ஆங்கிலத்தில் 'Parliament Complex' என்ற கல்வெட்டு நாணயத்தின் கீழ் சுற்றளவில் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் எடை 35 கிராம் அளவில் இருக்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா அன்று 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக 'செங்கோல்' நிறுவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு: ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிகழ்வின் நினைவாக, இந்த நினைவு நாணயங்கள் வெளியிடப்படுகிறது. அவை ஒரு சிறப்பு வடிவமைப்பில் இருக்கும். இந்த நாணயங்கள் பொதுவான புழக்கத்திற்கானவை கிடையாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்