Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹெல்மெட் போடாம போனாக்கூட 1000 தான்.. ஃபோன் பேசிட்டி போன்னிங்கனா எவ்வளோ தெரியுமா?

Nandhinipriya Ganeshan October 21, 2022 & 12:27 [IST]
ஹெல்மெட் போடாம போனாக்கூட 1000 தான்.. ஃபோன் பேசிட்டி போன்னிங்கனா எவ்வளோ தெரியுமா?Representative Image.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் விபத்து என்பது எண்ணில் அடங்காதவிற்கு அதிகரித்துள்ளது. அந்தவகையில், வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் நடவடிக்கையாக  மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருந்த நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10  மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இனி புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகன விதிமீறல்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. 

புதிய மோட்டார் வாகனச் சட்டம்:

  • ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000, 
  • செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 
  • 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1000
  • சிகப்பு, மஞ்சள் சிக்னல் இருக்கும்போது விதியை மீறி வாகனம் ஓட்டினால் ரூ.500
  • பர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10,000
  • தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5,000
  • ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், அவசர சேவை வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால் 10,000 
  • நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ரூ.1500
  • ஆட்டோ, கார், பஸ்களில் ஓட்டுனருக்கு இடைஞ்சலாக உட்கார்ந்து செல்லும் பயணிக்கு ரூ.1,500 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்