Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைன் லோன் ஆப்களுக்கு புதிய ஆப்பு..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Muthu Kumar August 11, 2022 & 11:45 [IST]
ஆன்லைன் லோன் ஆப்களுக்கு புதிய ஆப்பு..!  ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!Representative Image.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் இன்ஸ்டண்ட் லோன் வழங்கும் செயலிகளில் புழக்கம் அதிகரித்துள்ளது. இந்த செயலிகளில் சில நிமிடங்களில் பணம் கிடைத்துவிடுவதால் இதுபோன்ற உடனடி லோன் ஆப்களில் மக்கள் கடன் பெறுகின்றனர். 

இந்நிலையில், இந்த ஆப்களில் கடன் வாங்கியவர்கள் திரும்ப கடன் தொகையை செலுத்தியிருந்தாலும், செலுத்தா விட்டாலும் அவர்களுக்கு போன் செய்து மிரட்டுவது, அவர்களது புகைப்படங்களை மார்ப் செய்து மிரட்டுவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

இதனையடுத்து, ஆன்லைன் லோன் செயலிகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “கடன் வழங்கும் லோன் செயலிகள் கடனை பெற்றவரின் வங்கி கணக்கு மூலமாகவே பணம் பெற முடியும். மேலும் கடன் சேவை வழங்குபவர் அல்லது மூன்றாம் நபரின் கணக்குகளின் வழியாக பரிவர்த்தனை செயல்படக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடன் வாங்கியவரின் ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பு தொகையை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்