Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய முக்கிய செய்திகள்.. செய்திகள் வாசிப்பது உங்கள் ஏஐ ஆங்கர்..! - ஒடிசாவில் தனியார் நியூஸ் சேனலின் அசத்தல் முயற்சி

Baskaran Updated:
இன்றைய முக்கிய செய்திகள்.. செய்திகள் வாசிப்பது உங்கள் ஏஐ ஆங்கர்..! - ஒடிசாவில் தனியார் நியூஸ் சேனலின் அசத்தல் முயற்சி Representative Image.

புவனேஸ்வர்: ஒடிசாவில் தனியார் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை உருவாக்கி அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக இந்தியாவின் ஒடிசாவில் தனியார் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளரை வடிவமைத்துள்ளது. இதை சீனாவின் sogou உருவாக்கியுள்ளது. செயற்கை செய்திவாசிப்பாளரின் உடல்மொழி அசைவு, உதடு அசைவுகள், குரல் வரை அனைத்துமே ஏற்கனவே இருக்கும் செய்திவாசிப்பாளரை போலவே, ஆராய்ந்து உருவகப்படுத்தப்படுகிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளர்களுக்கு செய்தியை டைப் செய்து கொடுத்தால் போதும் செய்தி வாசிக்கும் வீடியோ கிடைத்து விடும். ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளர் செய்திகளை வாசிக்கும். இந்த மற்ற மொழிகளிலும் செய்தி வாசிக்க வைக்க முடியும். இதற்கு லிசா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் லிடிஷா மங்கத் பாண்டா கூறுகையில் ஒடியா மொழியில் லிசாவுக்கு பயிற்சி அளித்தது மிகப் பெரிய கடினமான பணியாகும். எப்படியோ அதில் நாங்கள் சாதித்து விட்டோம். எனினும் அதில் இன்னும் நாங்கள் சில பணிகளை மெருகேற்றி வருகிறோம்.  அவர் மற்றவர்களுடன் பேசும் அளவுக்கு அடுத்த லெவலுக்கு செல்ல பயிற்சி கொடுப்போம் என நம்புகிறோம் என்றார்.

ஒடிஸாவில் முதல் டிஜிட்டல் மீடியா ஒடிஸா டெலிவிஷன்தான். இது 1997 ஆம் ஆண்டு புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. கடந்த 2006 ஆம் தேதி கேபிளிலிருந்து சாட்டிலைட் சானலாக மாறியது. இந்த நிறுவனம் 25 ஆண்டுகளாக உள்ளது. லிசாவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பின்தொடரலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்