Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

234 தொகுதிகளிலும் 'இரவு பாடசாலை' திட்டம் - நடிகர் விஜய் அதிரடி முடிவு

saraswathi Updated:
234 தொகுதிகளிலும் 'இரவு பாடசாலை' திட்டம் - நடிகர் விஜய் அதிரடி முடிவுRepresentative Image.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காமராஜர் பிறந்தநாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவ-மாணவியருக்கு இரவு பாடசாலைத் திட்டத்தைத் தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவகத்தில், நிர்வாகிகளுடன் 2வது நாளாக நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். நேற்று தேனி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட நடிகர் விஜய், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இளம் வாக்காளர்களை கவரும் வகையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்தும், தொகுதிகளில் முக்கியமாக, உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, காமராஜர் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியன்று, தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாணவ-மாணவியருக்கான இரவு நேர பாடசாலைத் திட்டத்தை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்திற்கு, படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்னும் பெயர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும் அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் விஜய், தற்போது இரவு பாடசாலைத் திட்டத்தை தொடங்க முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்-இன் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள், அவர் விரைவில் அரசியலில் காலடி எடுத்துவைப்பார் என்பதற்கான முன்னோட்டமாகவே தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்