Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

மிரட்டும் மாண்டஸ் புயல்;  நீலகிரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன? 

Kanimozhi Updated:
மிரட்டும் மாண்டஸ் புயல்;  நீலகிரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன? Representative Image.

மாண்டாஸ் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யும் என்று எச்சரித்துள்ள நிலையில் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியபட்டுள்ளதாகவும், மீட்பு பணிகாக 42 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

மாண்டாஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் நாளை நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதனையடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அதுகுறித்து செய்தியளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரி: நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாகவும் இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, இப்பகுதியினை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்