Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை.....மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் அறிவிப்பு...!

madhankumar July 21, 2022 & 08:29 [IST]
தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை.....மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் அறிவிப்பு...!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை தாக்குதலை கண்டித்து கடந்த 18 ஆம் தேதி முதல் அணைத்து தனியார் பள்ளிகள், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்ற தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் பள்ளிகள் இயங்காது என இதுவரை எந்தவித அனுமதியும் வாங்கவில்லை, தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை,  முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியது. ஆனால் திட்டமிட்டபடி 987 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை அளித்த தனியப்பள்ளிகளுக்கு அரசின் அனுமதி பெறாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது ஏன் என அந்த பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதற்கு பதில் வரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

தற்போது அரசின் விதிமுறையை மீறி விடுமுறை வில்லா 987 தனியார் பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என மெட்ரிகுலேசன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 18 ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு  வகையில் ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி நடத்திக்கொள்கிறோம் என விளக்கம் அளித்த  நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்