Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது” பள்ளிக் கல்வித் துறை.

Muthu Kumar August 01, 2022 & 11:20 [IST]
“தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது” பள்ளிக் கல்வித் துறை.Representative Image.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “கொரோனா காலகட்டத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும் இதற்க்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனையாக எடுக்க வேண்டும்” என பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்திருக்கிறார்

மேலும், தமிழகத்தில் கொரோனாவால் 200 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 200 மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்தாலும் கட்டணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு பதிலாக பள்ளி கட்டணத்தை அரசு செலுத்துமா என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்