Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து...238 பேர் அகால மரணம் | Coromandel Express Train Accident

Priyanka Hochumin Updated:
இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து...238 பேர் அகால மரணம் | Coromandel Express Train AccidentRepresentative Image.

இந்தியாவில் எதிர்பாராத விதமாக ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 238 பேர் மரணமடைந்ததாகவும், 900-க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து தெற்கே 250 கிமீ தொலைவிலும், புவனேஸ்வருக்கு வடக்கே 170 கிமீ தொலைவிலும் உள்ள பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து ஏற்பட்டதைத்  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் திரட்டியுள்ளார். நேற்று இரவு முதல் மீட்பு படையினர் விபத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த தகவலின் படி இதுவரை 238 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த பின்னர் மாநில முதல்வர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களால் முடிந்த உதவிகளை அப்பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர். அதே போல இந்தியா ராணுவத்தினர் மீட்பு பணியில் உதவ அங்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை நடந்த ரயில் விபத்தில் இதுவே மிகவும் மோசமான விபத்தாக இருக்கும் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்