Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோகினூர் வைரத்திற்கு உரிமை கோரும் ஒடிசா அமைப்பு... குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனு…!

Gowthami Subramani September 13, 2022 & 13:15 [IST]
கோகினூர் வைரத்திற்கு உரிமை கோரும் ஒடிசா அமைப்பு... குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனு…!Representative Image.

இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரித்த, கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்குப் பிறகு கோஹினூர் வைரம் யாருக்குக் கிடைக்கும் என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து பெற்றுச் சென்ற கோஹினூர் வைரத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பானது, கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்குச் சொந்தமானது என தெரிவித்துள்ளது.

அதாவது, பஞ்சாப் மன்னரான ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் தோற்கடித்துள்ளார். இந்த வெற்றியின் நினைவாகவே, பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரம் நன்கொடையாக வழங்கப்பட்டது எனவும் ஜெகன்னாத் சேனா அமைப்பாளர் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்த வைரத்தை, ஆங்கிலேயர்கள் ரஞ்சித்சிங் மறைவிற்குப் பின்னர் ஆங்கிலேயர்கள், ரஞ்சித்சிங் மகனான துலீப்சிங்கிடம் இருந்து பறித்துச் சென்றுள்ளதாகவும் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு கடிதம் அனுப்பிய பின், அக்டோபர் 19, 2016 அன்று பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பட்நாயக்கிற்கு ஒரு தகவல் வந்ததாக கூறியுள்ளார். இந்த நிலையில், கோகினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கான நடவடிக்கையில் தலையிடுமாறு, பட்நாயக் அவர்கள், குடியரசுத் தலைவரான த்ரௌபதி முர்முவுக்கு மனு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்