Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே ஒரு மாணவர்...!

madhankumar June 20, 2022 & 12:30 [IST]
தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே ஒரு மாணவர்...!Representative Image.

தமிழ்நாட்டில் 12 வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 7 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதியதில் 92.3 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவியரில் 94.8 விழுக்காட்டினரும், மாணவர்களில் 89.4 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் மொத்தம் 7127 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், 2120 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகப்பட்சமாகத் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 97 விழுக்காட்டினரும், கோவை மாவட்டத்தில் 96.3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 86 விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.3 விழுக்காடும், மெட்ரிக் பள்ளிகள் 98.7 விழுக்காடும் தேர்ச்சி விகிதம் கொண்டுள்ளன. 

அறிவியல் பாடப்பிரிவுகளில் 93.6 விழுக்காட்டினரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 92.9 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப்பிரிவுகளில் 84.6 விழுக்காட்டினரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 79.8 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பில் 14 ஆயிரத்து 423 பேர் தேர்வெழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வு எழுதியோரில் தேர்ச்சி பெற்றோரின் விகிதம் 96 விழுக்காடாகும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91 புள்ளி ஒன்பது விழுக்காடாகும். தனியார்ப் பள்ளிகளில் 99.2 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 154 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில் 68 பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மேலும் மாநிலத்திலேயே ஒரு மாணவர் மட்டும் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். 
ஆங்கிலத்தில் 45 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
மேலும் கணக்கு பாடத்தில் 2,186 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
மேலும் அறிவியல் பாடத்தில் 3,841 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
சமூக அறிவியலில் 1009 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்