சென்னை: பருவமழை தொடங்குவதற்கு முன் சாலை, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் சாலை மற்றும் மேம்பால பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் நடைபெறும் சாலைகள் மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதல்வர்,
நமது அரசு பொறுப்பேற்று பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறது. அப்படி அறிவிக்க அப்படி அறிவிக்கப்பட்ட பணிகளின் செயல்பாடுகளை பல்வேறு காலகட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொய்வு இல்லாத நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
நமது அரசு தொழிற்சாலை கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி வருவதால் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சியில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் முக்கிய பங்கு வைப்பதால் தற்போது நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குறிப்பாக வடமேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆங்காங்கே நடைபெறும் சாலை மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இந்த பணிகள் தாமதமானால் பருவ மழையின் போது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தலாம் மேலும் பொது மக்களின் சீரான போக்குவரத்திற்கும் வாகன நெரிசல்களை தவிர்ப்பவர்களுக்கும் மேம்பாலங்கள் அவசியமாக கட்டப்படுவதால் இவற்றை மறைந்து முடிக்க உத்தரவிடுகிறேன் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…