Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Go back modi : சென்னைக்கு வரும் மோடிக்கு எதிர்ப்பு..? டிரெண்டிங்கில் Go back modi ஹேஷ்டேக்..?

Muthu Kumar May 26, 2022 & 15:15 [IST]
Go back modi : சென்னைக்கு வரும் மோடிக்கு எதிர்ப்பு..? டிரெண்டிங்கில் Go back modi ஹேஷ்டேக்..?Representative Image.

Go back modi : சென்னைக்கு பிரதமர் மோடி இன்று வர உள்ள நிலையில், Go back modi மற்றும்  #vanakkam_ modi என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்து அரசியல் கட்சியினர் சண்டையிட்டு வருகின்றனர்.

சென்னையில் மோடி

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒன்றிய அரசு சார்பில் பிரமாண்ட விழாவில் இன்று நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அதன்படி, இந்த நிகழ்வுக்கு கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து, அவரை வரவேற்க்க ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விமான நிலையம் செல்கின்றனர்.

பிரதமர் பயணம்

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். இவர் செல்லும் வழி முழுவதும் பா.ஜ.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட திட்டமிட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி 31,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

Go back modi 

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் Go back modi என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்வது வழக்கம். இந்நிலையில், இந்தமுறை பிரதமர் வருகையையொட்டி Go back modi என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

 #vanakkam_ modi 

இதனையடுத்து, இந்த ஹேஷ்டேக்கை பார்த்த பாஜகவினர் இதுக்கு போட்டியாக  #vanakkam_ modi என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்