Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர் விலகல்.. எல்லாம் ஒரு எம்பி பதவிக்காகத்தானா?

Sekar May 25, 2022 & 15:55 [IST]
காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர் விலகல்.. எல்லாம் ஒரு எம்பி பதவிக்காகத்தானா?Representative Image.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய கபில் சிபல் மே 16 அன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார். மேலும் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், நான் ராஜ்யசபாவுக்கு செல்ல விரும்புவதால், தயவு செய்து என்னை சுயேட்சையாக ஆதரிக்குமாறு அகிலேஷ் ஜியிடம் கேட்டேன் என்றும் அதற்கு அகிலேஷ் ஒப்புக்கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸிலிருந்து விலகி, சுயேட்சையாக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் காங்கிரசுக்கு எதிராகப் பேசமாட்டேன் இப்போது மட்டுமல்ல எப்போதும், பல எதிர்க்கட்சித் தலைவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. உத்தரப் பிரதேசத்துடன் எங்களுக்கு தொடர்பு இருப்பதாக என் மனைவி கூறியதை அடுத்து உத்தரபிரதேசம் மூலம் ராஜ்யசபா செல்ல முடிவு செய்தேன் என்றார்.

இது குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "இன்று கபில் சிபல் வேட்புமனு தாக்கல் செய்தார். சமாஜ்வாதி ஆதரவுடன் அவர் ராஜ்யசபா செல்கிறார். மேலும் இரண்டு பேர் எங்கள் சார்பில் ராஜ்யசபாவுக்கு செல்லலாம். கபில் சிபல் மூத்த வழக்கறிஞர். அவர் தனது மனுவை தாக்கல் செய்தார். பார்லிமென்டில் அவர் சமாஜ்வாதியின் கருத்துகளை முன்வைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழு

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தங்களைக் கோரிய காங்கிரஸ் தலைவர்களின் ஜி-23 குழுவில் கபில் சிபலும் ஒருவராக இருந்தார். சிபல் தனது குறைகளை வெளிப்படையாக கூறி, காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை நாடினார். காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த சிபல், காந்தி அல்லாத ஒருவரை புதிய கட்சித் தலைவராக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

கட்சி மாறியது எம்பி பதவிக்காகவா?

ஆனால் காங்கிரஸ் தலைமை மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்ததால், அங்கு மீண்டும் எம்பி பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தற்போது அங்கிருந்து வெளியேறி, சமாஜ்வாதி ஆதரவுடன் எம்பி பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

2024 தேர்தலுக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை கூட்டம் நடந்த நிலையில், சுனில் ஜாகர் மற்றும் ஹர்திக் படேல் ராஜினாமா செய்ததை அடுத்து, சிபலின் ராஜினாமா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் வெளியேறலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்