Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜக முதல்வர் பதவியேற்பு.. குஜராத் செல்கிறார் ஓபிஎஸ்.. பரபர பின்னணி!!

Sekar Updated:
பாஜக முதல்வர் பதவியேற்பு.. குஜராத் செல்கிறார் ஓபிஎஸ்.. பரபர பின்னணி!!Representative Image.

குஜராத் சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு ஓபிஎஸ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்தாலும், குஜராத்தில் முன்னெப்போதும் பெறாத வகையில், 156 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது.

இதையடுத்து ஏற்கனவே முதல்வராக இருக்கும் பூபேந்திர படேல், நாளை மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க, இன்று இரவே குஜராத் கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஜி20 தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் தரப்புக்கு மட்டும் அழைப்பு விடுத்ததால், ஓபிஎஸ் அணியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதை சமாதானம் செய்யும் வகையில், இந்த முறை ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்