Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவிட் காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு

Baskarans Updated:
கோவிட் காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு Representative Image.

சென்னை: கொரோனா காலத்தில் அவசர தேவைகளுக்காக பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஓதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.

கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது, போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு. 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2022 முதல் 096060 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்