Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாநிலங்கள் அவை உறுப்பினராக ப.சிதம்பரம் தேர்வாக வாய்ப்பு?

madhankumar May 18, 2022 & 10:12 [IST]
மாநிலங்கள் அவை உறுப்பினராக ப.சிதம்பரம் தேர்வாக வாய்ப்பு?Representative Image.

மாநிலங்கள் அவை உறுப்பினர் பதிவிற்கு ப.சிதம்பரம் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவ னில்தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களது வீட்டிலும் அலுவலகத்திலும் சிபிஐ சோதனையிடுவது முற்றிலுமாக பழிவாங்கும் நடவடிக்கையாகும். பொது வாழ்வில் ப.சிதம்பரத்தை போன்று நேர்மை, நாணயமிக்க அரசியல்வாதிகளை தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். அவருடைய காலத்தில் இந்த தேசத் துக்காக அதிகமாக உழைத்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் சேர்ந்து இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றனர். தற்போதுள்ள பொருளாதார சிந்தனைகள் அணைத்து அவரிடம் இருந்து வந்ததுதான். கிராம புரா வேலைவாய்ப்பு, உயர்கல்வி படிக்கும் மாணவர்ளுக்கு கல்விக்கடன் ஆகியவை அவரது காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என அவர் கூறியுள்ளார்.

அவரது பெருமையை சீர்குலைக்க மோடி அரசர்கள் செய்யும் கீழ்த்தரமான வேலைதான் இது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து எத்தனை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதை தெளிவாக கூறவேண்டும் பொதுவாக நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என கூறுவது கீழ்த்தரமான செயலாகும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் மற்ற மாநிலங்களில் தமிழை 3வது மொழியாக கொண்டுவர வேண்டாம் இன்ஜி தமிழை சிதைக்காமல் வாழவிட்டாலே போதும் என அவர் கூறினார். மேலும் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காக நான் யாருக்கும் கோரிக்கை வைக்கவில்லை. ப.சிதம்பரத்துக்கு அந்த பதவியை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்